புறம் கூறாமை — அதிகாரம் 19
Slander பிறர் பற்றி கோள் சொல்லாமை
குறள்கள்
- குறள் 181 — அறம்கூறா னல்ல செயினு மொருவன் புறம்கூறா னென்ற லினிது
- குறள் 182 — அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே புறனழீஇப் பொய்த்து நகை
- குறள் 183 — புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத லறம்கூறு மாக்கந் தரும்
- குறள் 184 — கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல்
- குறள் 185 — அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும் புண்மையாற் காணப் படும்
- குறள் 186 — பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந் திறன்றெரிந்து கூறப் படும்
- குறள் 187 — பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாட றேற்றா தவர்
- குறள் 188 — துன்னியர் குற்றமுந் தூற்று மரபினா ரென்னைகொ லேதிலார் மாட்டு
- குறள் 189 — அறன்நோக்கி யாற்றுங்கொல் வையம் புறநோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை
- குறள் 190 — ஏதிலார் குற்றம்போற் றம்குற்றங் காண்கிற்பிற் றீதுண்டோ மன்னு முயிர்க்கு