இனியவை கூறல் — அதிகாரம் 10
Affability இனிமையான சொற்களையே சொல்லுக
குறள்கள்
- குறள் 91 — இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
- குறள் 92 — அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந் தின்சொல னாகப் பெறின்
- குறள் 93 — முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா மின்சொ லினதே யறம்
- குறள் 94 — துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு மின்புறூஉ மின்சொ லவர்க்கு
- குறள் 95 — பணிவுடைய னின்சொல னாதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற
- குறள் 96 — அல்லவை தேய வறம்பெருகு நல்லவை நாடி யினிய சொலின்
- குறள் 97 — நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று பண்பிற் றலைப்பிரியாச் சொல்
- குறள் 98 — சிறுமையு ணீங்கிய வின்சொன் மறுமையு மிம்மையு மின்பந் தரும்
- குறள் 99 — இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ வன்சொல் வழங்கு வது
- குறள் 100 — இனிய வுளவாக லின்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று