இரவு அச்சம் — அதிகாரம் 107
The Dread of Begging வறுமையில் செம்மை
குறள்கள்
- குறள் 1061 — கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி யுறும்
- குறள் 1062 — இரந்தும் முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக வுலகியற்றி யான்
- குறள் 1063 — இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில்.
- குறள் 1064 — இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே இடனில்லாக் காலும் மிரவொல்லாச் சால்பு
- குறள் 1065 — தெண்ணீ ரடுபுற்கை யாயினுந் தாடந்த துண்ணலி னூங்கினிய தில்.
- குறள் 1066 — ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற் கிரவி னிளிவந்த தில்
- குறள் 1067 — இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற் கரப்பா ரிரவன்மி னென்று
- குறள் 1068 — இரவென்னு மேமாப்பி றோணி கரப்பா ரிரவன்மி பார்தாக்க பக்கு விடும்
- குறள் 1069 — இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள உள்ளதூஉ மின்றிக் கெடும்
- குறள் 1070 — கரப்பவர்க் கியாங்கொளிக்குங் கொல்லோ விரப்பார் சொல்லாடப் போஒ முயிர்