மடி இன்மை — அதிகாரம் 61
Sloth சோம்பல் இன்மை
குறள்கள்
- குறள் 601 — குடியென்னுங் குன்றா விளக்க மடியென்னு மாசூர மாய்ந்து கெடும்
- குறள் 602 — மடியை மடியா வொழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்
- குறள் 603 — மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியுந் தன்னினு முந்து
- குறள் 604 — குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து மாண்ட வுஞற்றி லவர்க்கு
- குறள் 605 — நெடுநீர் மறவி மடிதுயி னான்குங் கெடுநீரார் காமக் கலன்
- குறள் 606 — படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார் மாண்பய னெய்த லரிது
- குறள் 607 — இடிபுரிந் தெள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட வுஞற்றி லவர்
- குறள் 608 — மடிமை குடிமைக்கட் டங்கிற்றன் னொன்னார்க் கடிமை புகுத்தி விடும்
- குறள் 609 — குடியாண்மை யுள்வந்த குற்ற மொருவன் மடியாண்மை மாற்றக் கெடும்
- குறள் 610 — மடியின்மை மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான் றாஅய தெல்லா மொருங்கு