திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

பகைமாட்சி — அதிகாரம் 87

பொருட்பால் · அங்கவியல்

Easy Targets பகையின் தன்மை

குறள்கள்

  1. குறள் 861 — வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா மெலியார்மேன் மேக பகை
  2. குறள் 862 — அன்பில னான்ற துணையிலன் றான்றுவ்வா னென்பரியு மேதிலான் றுப்பு
  3. குறள் 863 — அஞ்சு மறியா னமைவில னீகலான் றஞ்ச மெளியன் பகைக்கு
  4. குறள் 864 — நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கு மெளிது
  5. குறள் 865 — வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க் கினிது
  6. குறள் 866 — காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும்
  7. குறள் 867 — கொடுத்துங் கொளல்வேண்டு மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை
  8. குறள் 868 — குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க் கினனிலனா மேமாப் புடைத்து
  9. குறள் 869 — செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா வஞ்சும் பகைவர்ப் பெறின்
  10. குறள் 870 — கல்லான் வெகுளுஞ் சிறுபொரு ளெஞ்ஞான்றும் ஒல்லானை யொல்லா தொளி
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural