திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

மன்னரைச் சேர்ந்து ஒழுகல் — அதிகாரம் 70

பொருட்பால் · அங்கவியல்

To Move with Kings மன்னரைச் சேர்ந்துஒழுகல்

குறள்கள்

  1. குறள் 691 — அகலா தணுகாது தீக்காய்வார் போல்க விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
  2. குறள் 692 — மன்னர் விழைப விழையாமை மன்னரான் மன்னிய வாக்கந் தரும்
  3. குறள் 693 — போற்றி னரியவை போற்றல் கடுத்தபின் றேற்றுதல் யார்க்கு மரிது
  4. குறள் 694 — செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையு மவித்தொழுக லான்ற பெரியா ரகத்து
  5. குறள் 695 — எப்பொருளு மோரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்காற் கேட்க மறை
  6. குறள் 696 — குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல்
  7. குறள் 697 — வேட்பன சொல்லி வினையில வெஞ்ஞான்றுங் கேட்பினுஞ் சொல்லா விடல்
  8. குறள் 698 — இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற வொளியோ டொழுகப் படும்
  9. குறள் 699 — கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர்
  10. குறள் 700 — பழைய மெனக்கருதி பண்பல்ல செய்யுங் கெழுதகைமை கேடு தரும்.
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural