அவை அஞ்சாமை — அதிகாரம் 73
Facing an Assembly அவை அஞ்சாமை
குறள்கள்
- குறள் 721 — வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்
- குறள் 722 — கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முற் கற்ற செலச்சொல்லு வார்
- குறள் 723 — பகையகத்துச் சாவா ரெளிய ரரிய அவையகத் தஞ்சா தவர்
- குறள் 724 — கற்றார்முற் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற மிக்காருண் மிக்க கொளல்
- குறள் 725 — ஆற்றி னளவறிந்து கற்கவவை யஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு
- குறள் 726 — வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென் னுண்ணவை யஞ்சு பவர்க்கு
- குறள் 727 — பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல்
- குறள் 728 — பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் னன்கு செலச்சொல்லா தார்.
- குறள் 729 — கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும் நல்லார் அவை அஞ்சுவார்
- குறள் 730 — உளரெனினு மில்லாரோ டொப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார்