காதல் - சிறப்பு உரைத்தல் — அதிகாரம் 113
In Praise of the Beloved காதல் சிறப்பு உரைத்தல்
குறள்கள்
- குறள் 1121 — பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்
- குறள் 1122 — உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு
- குறள் 1123 — கருமணியின் பாவாய்நீ போதாய்யாம் வீழும் திருநுதற் கில்லை யிடம்
- குறள் 1124 — வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாதல் அதற்கன்ன ணீங்கு மிடத்து
- குறள் 1125 — உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே னொள்ளமர்க் கண்ணாள் குணம்
- குறள் 1126 — கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார் நுண்ணியரெங் காத லவர்
- குறள் 1127 — கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் மெழுதேங் கரப்பாக் கறிந்து
- குறள் 1128 — நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட லஞ்சுதும் வேபாக் கறிந்து
- குறள் 1129 — இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே யேதில ரென்னுமிவ் வூர்
- குறள் 1130 — உவந்துறைவ ருள்ளத்து ளென்று மிகந்துறைவ ரேதில ரென்னுமிவ் வூர்