திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

வாய்மை — அதிகாரம் 30

அறத்துப்பால் · துறவற இயல்

Truthfulness உண்மை பேசுதல்

குறள்கள்

  1. குறள் 291 — வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந் தீமை யிலாத சொலல்
  2. குறள் 292 — பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்
  3. குறள் 293 — தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் றன்னெஞ்சே தன்னைச் சுடும்
  4. குறள் 294 — உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா ருள்ளத்து ளெல்ல முளன்
  5. குறள் 295 — மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு தானஞ்செய் வாரின் தலை
  6. குறள் 296 — பொய்யாமை யன்ன புகழில்லை பொய்யாமை யெல்லா வறமுந் தரும்
  7. குறள் 297 — பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற செய்யாமை செய்யாமை நன்று
  8. குறள் 298 — புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை வாய்மையாற் காணப் படும்
  9. குறள் 299 — எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு
  10. குறள் 300 — யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும் வாய்மையி னல்ல பிற
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural