நீத்தார் பெருமை — அதிகாரம் 3
Ascetics துறவை மேற்கொண்டவரின் சிறப்பு
குறள்கள்
- குறள் 21 — ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவற் றுணிவு
- குறள் 22 — துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று
- குறள் 23 — இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு
- குறள் 24 — உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்புக்கோர் வித்து
- குறள் 25 — ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா னிந்திரனே சாலுங் கரி
- குறள் 26 — செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்
- குறள் 27 — சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு
- குறள் 28 — நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்
- குறள் 29 — குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது
- குறள் 30 — அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்