திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

அறன் வலியுறுத்தல் — அதிகாரம் 4

அறத்துப்பால் · பாயிரம்

Virtue அறத்தின் சிறப்பை வலியுறுத்திக் கூறுதல்

குறள்கள்

  1. குறள் 31 — சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங் காக்க மெவனோ வுயிர்க்கு
  2. குறள் 32 — அறத்தினூஊங் காக்கமு மில்லை யதனை மறத்தலி னூங்கில்லையாங் கேடு
  3. குறள் 33 — ஒல்லும் வகையா னறவினை யோவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல்
  4. குறள் 34 — மனத்துக்கண் மாசில னாத லனைத்தற னாகுல நீர பிற
  5. குறள் 35 — அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு மிழுக்கா வியன்ற தறம்
  6. குறள் 36 — அன்றறிவா மென்னா தறம்செய்க மற்றது பொன்றுங்காற் பொன்றாத் துணை
  7. குறள் 37 — அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை
  8. குறள் 38 — வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல்
  9. குறள் 39 — அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம் புறத்த புகழு மில
  10. குறள் 40 — செயற்பால தோரு மறனே யொருவற் குயற்பால தோரும் பழி
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural