திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

தீவினை அச்சம் — அதிகாரம் 21

அறத்துப்பால் · இல்லற இயல்

Doing Evil பிறருக்கு தீமை செய்ய அஞ்சுதல்

குறள்கள்

  1. குறள் 201 — தீவினைய ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு
  2. குறள் 202 — தீயவை தீய பயத்தலாற் றீயவை தீயினு மஞ்சப் படும்
  3. குறள் 203 — அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய செறுவார்க்குஞ் செய்யா விடல்
  4. குறள் 204 — மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு
  5. குறள் 205 — இலனென்று தீயவை செய்யற்க செய்யி னிலனாகு மற்றும் பெயர்த்து
  6. குறள் 206 — தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால தன்னை யடல்வேண்டா தான்
  7. குறள் 207 — எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும்
  8. குறள் 208 — தீயவை செய்தார் கெடுத னிழறன்னை வீயா தடியுரைந் தற்று
  9. குறள் 209 — தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றுந் துன்னற்க தீவினைப் பால்
  10. குறள் 210 — அருங்கேட னென்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யா னெனின்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural