பிறன் இல் விழையாமை — அதிகாரம் 15
Faithfulness பிறனுடைய மனைவியை விரும்பாமை
குறள்கள்
- குறள் 141 — பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்க ணில்
- குறள் 142 — அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில்
- குறள் 143 — விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற் றீமை புரிந்தொழுகு வார்
- குறள் 144 — எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந் தேரான் பிறனில் புகல்
- குறள் 145 — எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி
- குறள் 146 — பகைபாவ மச்சம் பழியென நான்கு மிகவாவா மில்லிறப்பான் கண்
- குறள் 147 — அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன்
- குறள் 148 — பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனொன்றோ வான்ற வொழுக்கு
- குறள் 149 — நலக்குரியார் யாரெனி னாமநீர் வைப்பிற் பிறற்குரியா டோடோயா தார்
- குறள் 150 — அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று