இல்வாழ்க்கை — அதிகாரம் 5
Domestic Life மனைவியோடு கூடிவாழ்தல்
குறள்கள்
- குறள் 41 — இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு நல்லாற்றி னின்ற துணை
- குறள் 42 — துறந்தார்க்குத் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு மில்வாழ்வா னென்பான் றுணை
- குறள் 43 — தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங் கைம்புலத்தா றோம்ப றலை
- குறள் 44 — பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்
- குறள் 45 — அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை பண்பும் பயனு மது
- குறள் 46 — அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன்
- குறள் 47 — இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான் முயல்வாரு ளெல்லாந் தலை
- குறள் 48 — ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரி னோன்மை யுடைத்து
- குறள் 49 — அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும் பிறன்பழிப்ப தில்லாயி னன்று
- குறள் 50 — வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும்