பசப்பு உறு பருவரல் — அதிகாரம் 119
Pallor காதல் நோய்
குறள்கள்
- குறள் 1181 — நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க் குரைக்கோ பிற
- குறள் 1182 — அவர்தந்தா ரென்னுந் தகையா லிவர்தந்தென் மேனிமே லூரும் பசப்பு
- குறள் 1183 — சாயலும் நாணு மவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையுந் தந்து
- குறள் 1184 — உள்ளுவன் மன்யா னுரைப்ப தவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு
- குறள் 1185 — உவக்காணெங் காதலர் செல்வா ரிவக்காணென் மேனி பசப்பூர் வது
- குறள் 1186 — விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு
- குறள் 1187 — புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தே னவ்வளவி லள்ளிக்கொள் வற்றே பசப்பு
- குறள் 1188 — பசந்தா ளிவளென்ப தல்லா லிவளைத் துறந்தா ரவரென்பா ரில்
- குறள் 1189 — பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நம்நிலைய ராவ ரெனின்
- குறள் 1190 — பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றா ரெனின்