கடவுள் வாழ்த்து — அதிகாரம் 1
In Praise of God கடவுளை வணங்குதல்
குறள்கள்
- குறள் 1 — அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு
- குறள் 2 — கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ னற்றா டொழாஅ ரெனின்
- குறள் 3 — மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்
- குறள் 4 — வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்கு யாண்டு மிடும்பை யில
- குறள் 5 — இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
- குறள் 6 — பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்
- குறள் 7 — தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான் மனக்கவலை மாற்ற லரிது
- குறள் 8 — அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழி நீந்த லரிது
- குறள் 9 — கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான் றாளை வணங்காத் தலை
- குறள் 10 — பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா ரிறைவனடி சேரா தார்