அழுக்காறாமை — அதிகாரம் 17
Envy பொறாமை கொள்ளாமை
குறள்கள்
- குறள் 161 — ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு
- குறள் 162 — விழுப்பேற்றி னஃதொப்ப தில்லையார் மாட்டு மழுக்காற்றி னன்மை பெறின்
- குறள் 163 — அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம் பேணா தழுக்கறுப் பான்
- குறள் 164 — அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி னேதம் படுபாக் கறிந்து
- குறள் 165 — அழுக்கா றுடையர்க் கதுசாலு மொன்னார் வழுக்கியுங் கேடீன் பது
- குறள் 166 — கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ முண்பதூஉ மின்றிக் கெடும்
- குறள் 167 — அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ டவ்வையைக் காட்டி விடும்.
- குறள் 168 — அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி யுய்த்து விடும்
- குறள் 169 — அவ்விய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான் கேடு நினைக்கப் படும்
- குறள் 170 — அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார் பெருக்கத்திற் றீர்ந்தாரு மில்