கண்
என்று முடியும் குறள்கள்
பகைபாவ மச்சம் பழியென நான்கு
மிகவாவா மில்லிறப்பான் கண்
இளங்குமரனார்
பிறன் மனையைத் தேடிச் செல்பவனுக்குப் பகை பாவம் அச்சம் பழி என்பவை நீங்கவே நீங்கா.
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்ட மில்லாத கண்
இளங்குமரனார்
பாடலோடு இசையாத இசை இசையாகாது; அதுபோல் கண்ணோட்டம் இல்லாத கண்ணும் கண் ஆகாது.
உளபோன் முகத்தேவன் செய்யு மளவினாற்
கண்ணேட்ட மில்லாத கண்
இளங்குமரனார்
வேண்டும் அளவால் கண்ணோட்டம் இல்லாத கண், இருப்பதுபோல் முகத்தில் தெரிந்தாலும் பயல் என்ன?
ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந்
தெற்றென்க மன்னவன் சண்
இளங்குமரனார்
ஆளுபவர்க்கு ஒற்றரும் தகுதி வாய்ந்த அறநூலும் ஆகிய இரண்டும் கண்கள் என்பது தெளிவாகும்.
குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு
ளென்ன பயத்தவோ கண்
இளங்குமரனார்
கண்ட அளவில் உட்கருத்தை அறிய முடியாது ஆயின், அவன் உறுப்புகளுள் கண் என்ன பயனுடையது?
கண்டார் ரயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்
இளங்குமரனார்
கண்டவர் உயிரைப் பருகும் தோற்றத்தை உடையது இவ்விளையவள் கண்.
கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்
இளங்குமரனார்
வளைந்த புருவங்கள் வளையாமல் மறைத்தால் இவள் கண்கள் இவ்வாறு துன்புறுத்த மாட்டா
மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற
படலொலல்லா பேதைக்கென் கண்
இளங்குமரனார்
என் துயரை அறியாதவளுக்காகக் கண்ணுறக்கம் கொள்ளேன். நடு இரவிலும் அதனை வெளிப்படுத்தவே விரும்புவேன்.
உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண்
இளங்குமரனார்
அவருள்ள இடத்திற்கு மனம் போவது போல் கண்ணும் சென்றால் இப்படிக் கண்ணீரில் நீந்தாவே.
படலாற்றா பைதல் லுழக்குங் கடலாற்றாக்
காமநோய் செய்தவென் கண்
இளங்குமரனார்
கூடலிற் பெரிய காம நோயைத் தந்த கண்பட முடியாத் துயரைப் படுகின்றது.
உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்கண்ட கண்
இளங்குமரனார்
விரும்பி நெகிழ்ந்து அவரைக் கண்ட கண், துயர் பட்டுப் பட்டு நீர்வறண்டு போவதாக.
பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்
இளங்குமரனார்
விரும்பாமலே விரும்பிய அவர் உள்ளார். அவரைக் காணாமல் இருக்க முடியவில்லை கண்ணுக்கு.
வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா ஆயிடை
யாரஞ ருற்றன கண்
இளங்குமரனார்
அவர் வராத போதும் உறங்காது; வந்தாலும் உறங்காது; ஆதலால் கண்ணுக்கு எப்பொழுதும் துயர் நீங்காது.
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் ருள்ளி
நறுமலர் நாணின கண்
இளங்குமரனார்
இழிவு நமக்கு உண்டாகப் பிரிந்தவரை நினைத்து வாடுதலால், மலருக்கு வெட்குகிறதே கண்.
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்
இளங்குமரனார்
நிறம் மாறி நீர் சொட்டும் கண்கள் அவர் உதவாமையை உரைக்கும் போலும்!
பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக்
காணா தமையல கண்
இளங்குமரனார்
நம் விருப்பம் கருதாமல் அவர் விருப்பம் போல் நடந்தாலும், அவரைக் காணவே விருப்பாகும்.