குறள் 530 — சுற்றம் தழால்
பொருட்பால் · அரசு இயல் · சுற்றம் தழால்
குறள்
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்த
னிழைத்திருந் தெண்ணிக் கொளல்
பொருள்
நெருங்கியிருந்து பிரிந்து ஒரு காரணத்தால் மீளவும் வந்தவனைத் தலைவன் பொறுத்திருந்து ஆராய்ந்து ஏற்க வேண்டும்.