குறள் 897 — பெரியாரைப் பிழையாமை
பொருட்பால் · அங்கவியல் · பெரியாரைப் பிழையாமை
குறள்
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு மென்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்
பொருள்
பண்பால் உயர்ந்த பெரியவர் சினத்துக்கு ஆட்பட்டால் சிறந்த வாழ்வும் பெரும் பொருளும் கூடப் பயன்படா.