திருக்குறள்
உலகப் பொது மறை — அறம், பொருள், இன்பம்.
இன்றைய குறள்
பொருட்பால் › அரசு இயல் › இடன் அறிதல்
சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்த
ருறைநிலத்தோ டொட்ட லரிது
இளங்குமரனார் — பாதுகாப்பும் படைச்சிறப்பும் இல்லாதவர் என்றாலும் அவர் தங்கி யிருக்கும் இடத்தை வலியவரும் அடைதல் அரிது.