காப்பு
என்று முடியும் குறள்கள்
செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு
இளங்குமரனார்
நட்புச் செய்தலினும் சிறந்த செயல்இல்லை; அதுபோல் காவல் கடமைக்குச் சிறந்த உதவியாவதும் இல்லை
ஏரினும் நன்றா மெருவிடுதல் கட்டபின்
நீரினு நன்றதன் காப்பு
இளங்குமரனார்
உழுவதிலும் எருவிடலும் களைஎடுத்தலும் நீர்விடலும் காவல் காத்தலும் சிறப்பாக வேண்டுவன.