இலன்
என்று முடியும் குறள்கள்
யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன்
இளங்குமரனார்
ஒருவன் எவற்றை வேண்டா என்று விடுகின்றானோ அவற்றால் அவன் துன்பப்படுதல் இல்லை.
இன்பம் விழையா னிடும்பை யியல்பென்பான்
றுன்ப முறுத லிலன்
இளங்குமரனார்
இன்பத்தை விரும்பாது துன்பத்தை இயல்பானது என்பவன் துன்பம் அடையான்.
இன்பத்து ளின்பம் விழையாதான் றுன்பத்துட்
டுன்ப முறுத லிலன்
இளங்குமரனார்
இனியதில் மிக இனியதை விரும்பாதவன், துயரில் மிகு துயரை அடையான்.