திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

விருந்து

என்று முடியும் குறள்கள்

குறள் 90

மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

இளங்குமரனார்

முகர்ந்த அளவால் அனிச்சப்பூ வாடும்; விருந்தினரோ முகமாறிப் பார்த்த அளவாலேயே வாடி விடுவர்.

குறள் 90

குறள் 1211

காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து

இளங்குமரனார்

தலைவர் வருவார் எனத் தூதாக வந்த களவுக்கு யான் என்ன விருந்து செய்வேன்.

குறள் 1211

குறள் 1268

வினைகலந்து வென்றிக வேந்தன் மனைகலந்து
மாலை யயர்கம் விருந்து

இளங்குமரனார்

ஆட்சித் தலைவன் செயல் சிறந்து வெல்க. யாம் வீட்டுத் தலைவனோடு கூடி, விருந்தாடுவோம்.

குறள் 1268

சீர் வரிசை | குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural