திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

தூது

என்று முடியும் குறள்கள்

குறள் 685

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது

இளங்குமரனார்

சொல்ல வேண்டியவற்றைத் தொகுத்துரைத்துத் தகாதவற்றை விலக்கி மகிழவுரைத்து நலம்புரிவது தூதன் இயல்பாம்.

குறள் 685

குறள் 686

கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தாற்
றக்க தறிவதாந் தூது.

இளங்குமரனார்

கல்வியும் அஞ்சாமையும் பதியச் சொல்வதும் உரிய பொழுதில் அறிய வேண்டியதை அறிவதும் தூது ஆகும்.

குறள் 686

குறள் 690

இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற்
குறுதி பயப்பதாந் தூது

இளங்குமரனார்

அழிவே ஏற்படும் எனினும் தன் நாட்டுக்கு நன்மை தருவதைச் சொல்வதே தூதின் மாண்பாகும்.

குறள் 690

சீர் வரிசை | குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural